இது யுனெஸ்கோவினால் அனுசரிக்கப்படும் நுண்கலைகளுக்கான ஒரு சர்வதேச அனுசரிப்பாகும்.
இது உலகம் முழுவதும் ஆக்கப்பூர்வ மற்றும் படைப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்காக யுனெஸ்கோவின் ஒரு பங்காளரான சர்வதேசக் கலைக் கூட்டமைப்பினால் (IAA - International Association of Art) அறிவிக்கப்பட்டது.
இது கூகுள் கலைத் திட்டத்தினால் நிகழ்நேரத்திலும் ஆதரிக்கப்படுகின்றது.
முதலாவது உலகக் கலை தினமானது 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று அனுசரிக்கப் பட்டது.
லியோனார்டோ டாவின்சி என்பவரின் பிறந்த தினத்தின் நினைவாக இத்தினமானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இவர் இத்தாலியைச் சேர்ந்த ஓர் ஓவியராக அறியப் படுகின்றார்.
இவர் தொல்லுயிரியல், புதைபடிவத் தடயவியல் மற்றும் கட்டிடக் கலையின் தந்தையாகக் கருதப்படுகின்றார்.
இவர் உலக அமைதி, சுதந்திரமான சிந்தனையின் வெளிப்பாடு, சகிப்புத் தன்மை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகின்றார்.
இவரது பணிகள்
மோனா லிசா என்பது இவரது பணிகளில் மிகவும் புகழ்பெற்றது மற்றும் இதுவரை மேற்கொள்ளப்படாத மிகப் புகழ்பெற்ற ஒரு சித்திரப் பிரதி ஓவியமாகக் கருதப் படுகின்றது.
இவரது “லாஸ்ட் சப்பர்” என்பது வரலாற்றில் அதிக அளவில் மறுபதிப்பு செய்யப்பட்ட ஓவியமாகும்.
இவரின் “விட்ருவியன் மேன் ஓவியம்” ஒரு கலாச்சாரச் சின்னமாகக் கருதப் படுகின்றது.
இவரின் “சல்வாடோர் முன்டி” என்பது கலைப் பணிக்காக இதுவரை அளிக்கப்படாத அதிக விலையைக் கொண்ட ஒரு ஓவியமாகும்.
இது 2017 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் கிறிஸ்டியின் ஏலத்தின் போது உலகச் சாதனை விலையாக $450.3 மில்லியனுக்கு விற்கப் பட்டது.