TNPSC Thervupettagam

உலகக் கல்லீரல் தினம் – ஏப்ரல் 19

April 21 , 2020 1621 days 528 0
  • இது கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது. 
  • மூளையை அடுத்து, உடலில் உள்ள மிகவும் சிக்கலான உறுப்பு மற்றும் இரண்டாவது மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் ஆகும்.
  • இது நமது உடலின் செரிமான அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
  • ஹெப்படைடிஸ் என்ற கூறானது கல்லீரலின் வீக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது. 
  • இது மது போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்களுக்கு கல்லீரல் உட்படுத்தப்படும் பொழுது அல்லது வைரஸ் தொற்று ஆகியவற்றினால் ஏற்படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று, இந்திய அரசின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமானது தேசிய வைரஸ் ஹெப்படைடிஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2030 ஆம் ஆண்டு வாக்கில் வளம் குன்றா வளர்ச்சி இலக்கு 3.3 என்ற இலக்கை அடையும் பொருட்டு இந்தியாவில் ஹெப்படைடிஸ் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் அதைத் தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்