TNPSC Thervupettagam

உலகக் கல்வி புள்ளி விவரங்கள் 2024

November 11 , 2024 14 days 97 0
  • யுனெஸ்கோ அமைப்பின் புள்ளி விவரங்கள் நிறுவனமானது (UIS) 2024 ஆம் ஆண்டு உலகக் கல்வி புள்ளிவிவரங்கள் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டில் 13.2% ஆக இருந்த கல்விக்கானப் பொதுச் செலவினங்களின் உலகச் சராசரியானது 2020 ஆம் ஆண்டில் 12.5% ஆகக் குறைந்துள்ளது.
  • நேபாளம் மற்றும் பூடான் போன்ற தெற்காசிய நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4-6% பங்கினைக் கல்விக்காக ஒதுக்கியுள்ளன.
  • இந்தியா 2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கல்விக்காக என்று அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 4.1-4.6% பங்கையேச் செலவிட்டுள்ளது.
  • 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான ஒரு காலக் கட்டத்தில் கல்விக்கான இந்திய அரசின் செலவினம் 13.5% முதல் 17.2% வரை என்ற ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது.
  • மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் 2022 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கின் சதவீதத்தில், இந்தியாவின் கல்விச் செலவினம் ஆனது பூடான் (7.5%), கஜகஸ்தான் (7.2%), மாலத்தீவுகள் (4.7%), தஜிகிஸ்தான் (5.7%) மற்றும் உஸ்பெகிஸ்தான் (5.2%) ஆகியவற்றின் செலவினங்களை விட மட்டுமே குறைவாக உள்ளது.
  • முழு ஆசியப் பிராந்தியத்துடன் ஒப்பிடச் செய்கையில், ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளை விட இந்தியாவின் செலவினம் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்