TNPSC Thervupettagam

உலகக் கழிவு மேலாண்மை கண்ணோட்ட அறிக்கை 2024

March 7 , 2024 134 days 255 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு மற்றும் சர்வதேச திடக்கழிவு சங்கம் (ISWA) ஆனது '2024 ஆம் ஆண்டு உலகக் கழிவு மேலாண்மை கண்ணோட்ட அறிக்கையினை' சமீபத்தில் வெளியிட்டது.
  • நகர்ப்புற திடக்கழிவு ஆனது 2050 ஆம் ஆண்டிற்குள் 2.3 பில்லியன் டன்னில் இருந்து 3.8 பில்லியன் டன்னாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • உலகளாவிய தெற்கு மற்றும் உலகின் வளர்ந்து வரும் பகுதிகளில் 2.7 பில்லியனுக்கும் அதிகமான மக்களின் கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்படுவதில்லை.
  • இந்த 2.7 பில்லியனில் இரண்டு பில்லியன் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என்ற நிலையில், அதில் 700,000 பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
  • உலகின் மொத்தக் கழிவுகளில் 27 சதவீதத்திற்குச் சமமான சுமார் 540 மில்லியன் டன் அளவு நகராட்சி திடக்கழிவுகள் சேகரிக்கப்படுவதில்லை.
  • 2020 ஆம் ஆண்டில், கழிவு மேலாண்மைக்கான உலகளாவிய நேரடிச் செலவினம் 252 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2050 ஆம் ஆண்டில், இந்த உலகளாவிய வருடாந்திரச் செலவினம் சுமார் இரு மடங்காக 640.3 பில்லியன் டாலர்களாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்