தொழில்நுட்பத்தை நாம் அதிகம் சார்ந்து இருக்கத் தொடங்கியதால், நமது விலை மதிப்பற்ற எண்ம ஆவணங்களைப் பாதுகாப்பதனைக் குறித்து இந்தத் தினம் நமக்கு நினைவூட்டுகிறது.
இது நம் வாழ்வில் தரவுகளின் பங்கு மற்றும் வழக்கமான காப்புப் பிரதிகளை மேற் கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கான நாளாகும்.
உலக காப்புப் பிரதி தின இணையத் தளத்தின்படி, 21% பேர் தங்கள் தரவை ஒருபோதும் காப்புப் பிரதி எடுத்ததில்லை.
29 சதவிகித அளவிலான தரவு இழப்புகள் எதிர்பாராத விதமாக ஏற்படுகின்றன என்ற நிலையில் அனைத்துக் கணினிகளில் 30% கணினிகள் தீம்பொருளால் பாதிக்கப் பட்டு உள்ளன.