உலக காற்றுத் தர அறிக்கையானது IQAir AirVisual என்ற அமைப்பால் தொகுக்கப் பட்டுள்ளது.
மிக மோசமான காற்று மாசுபாட்டைக் கொண்ட உலகில் உள்ள 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
PM 2.5க்கு மிகவும் மாசுபட்ட நாடாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது என்றும் உலகில் 5வது அதிக மாசுபட்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது.
நாட்டின் முதலாவது தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டத்தை (National Clean Air Programme - NCAP) இந்தியா அறிமுகப்படுத்தியதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
NCAP ஆனது பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 காற்று மாசுபாட்டை 102 நகரங்களில் 2017 நிலைகளுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் 20-30% ஆகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.