ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 14 அன்று உலகம் முழுவதும் உலக குருதிக் கொடையாளர் தினம் அனுசரிக்கப்படுகின்றது
இந்த நிகழ்வு, உயிர் காக்கும் இரத்தத்தைத் தானாகவே முன்வந்து கொடுக்கும் குருதிக் கொடையாளர்களுக்கு நன்றி செலுத்துகின்றது. இது தொடர்ந்து இரத்தம் வழங்குதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
இந்த ஆண்டின் உலகக் குருதிக் கொடையாளர் தினத்தை நடத்தும் நாடு ருவாண்டா ஆகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அனைவருக்குமான பாதுகாப்பான இரத்தம்” என்பதாகும்.
58-வது உலக சுகாதார சபை ஜீன் 14 ஆம் தேதியை வருடாந்திர அளவில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சியாக உலகக் குருதிக் கொடையாளர் தினத்தைத் தேர்ந்தெடுத்தது.
இது 2005 ஆம் ஆண்டு முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
உலக சுகாதார தினம், உலக காசநோய் தினம், உலக நோய்த் தடுப்பு வாரம், உலக மலேரியா தினம், உலக புகையிலை எதிர்ப்புத் தினம், உலக கல்லீரல் அழற்சி தினம் மற்றும் உலக எய்ட்ஸ் தினம் போன்ற உலக சுகாதார அமைப்பினால் நடத்தப்படும் 8 சர்வதேச பொதுச் சுகாதாரப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகும்.