TNPSC Thervupettagam

உலகச் சமத்துவமின்மை அறிக்கை 2021

December 11 , 2021 953 days 487 0
  • பிரான்சைச் சேர்ந்த உலகச் சமத்துவமின்மை என்ற ஒரு ஆய்வக நிறுவனமானது இந்த அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்த நிறுவனத்தின் இணை இயக்குநரான லுகாஸ் சான்செல் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்.
  • புகழ்பெற்ற பிரஞ்சுப் பொருளாதார நிபுணரான தாமஸ் பிகெட்டி என்பவர் இதனை ஒருங்கிணைத்துள்ளார்.
  • 2021 ஆம் ஆண்டின் மொத்த தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான அளவை இந்திய மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதத்தினர் மட்டுமே கொண்டு உள்ளனர் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • நாட்டின் மொத்த மக்கள்தொகையில் அடித்தட்டிலுள்ள மக்கள் வெறும் 13.1% மட்டுமே சம்பாதிக்கின்றனர்.
  • இந்தியா மேற்கொண்டுள்ளப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் தாராள மயமாக்கல் போன்றவை, பெரும்பாலும் மேல்மட்டத்திலுள்ள 1 சதவீதத்தினருக்கு மட்டுமே பலனளித்துள்ளன என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • இந்த அறிக்கை இந்தியாவைப் பணக்கார உயர்தட்டு மக்களைக் கொண்ட ஒரு ஏழை மற்றும் சமத்துவமற்ற நாடாக அடையாளப் படுத்துகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள 1% என்ற அளவிலான பணக்கார மக்கள் மொத்த தேசிய வருமானத்தில் 22 சதவீதத்தினையும், அதன் முதல் 10 சதவீதத்தினர் 57 சதவீதத்தினையும் கொண்டுள்ளனர்.
  • வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் வயது வந்தோரின் சராசரி தேசிய வருமானமானது ரூ.2,04,200 ஆகும்.
  • எனினும், நாட்டின் சராசரி மொத்த தேசிய வருமானமானது, ஏற்றத் தாழ்வுகளை மறைக்கும் வகையில் உள்ளதாக இந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்