TNPSC Thervupettagam

உலகச் சுகாதார நிறுவனம் – ஆளுகை 

April 14 , 2020 1594 days 533 0
  • அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் உலகச் சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
  • டிரம்ப் உலகச் சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவிப் பங்கை நிறுத்த முடிவு செய்தால், இந்நிறுவனம் அமெரிக்காவின் வாக்களிப்பு உரிமையை நீக்கி அதன் சேவைகளை அமெரிக்கா பயன்படுத்தத் தடை விதிக்கும்.
  • உலகச் சுகாதார நிறுவனத்தின் சபையானது (அனைத்து உறுப்பு நாடுகளையும் கொண்ட சபை) இந்த அமைப்பின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றது.
உலகச் சுகாதார நிறுவனம் பற்றி
  • உலகச் சுகாதார நிறுவனம் ஆனது 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 அன்று செயல்பாட்டிற்கு வந்தது. இந்தத் தேதியானது தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் உலகச் சுகாதார தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ளது.
  • தற்பொழுது உலகச் சுகாதார நிறுவனத்திற்கு மிக அதிக அளவில் நிதியுதவியை அளிக்கும் நாடு அமெரிக்கா ஆகும்.
  • இதற்கு அடுத்து உலகச் சுகாதார நிறுவனத்திற்கு பில் &  மெலிண்டா கேட்ஸ் அமைப்பால் அதிக அளவில் நிதியுதவி அளிக்கப் படுகின்றது.
  • இந்நிறுவனத்திற்கான மூன்றாவது மிகப்பெரிய நிதியுதவிப் பங்காளர் கேவி தடுப்பு மருந்துக் கூட்டமைப்பாகும்.
  • இந்தியா மொத்த நிதியில் 0.48% நிதியையும், சீனா 0.21% நிதியையும் இந்நிறுவனத்திற்கு அளிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்