உலகச் சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 05
June 7 , 2023
540 days
282
- இந்த நாள் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இது அனுசரிக்கப் படுகிறது.
- 1972 ஆம் ஆண்டில் மனிதச் சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.
- இந்த மாநாட்டின் விளைவாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) 1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
- UNEP சுற்றுச்சூழலுக்கான ஒரு சிறப்பு நாளை முன்மொழிந்தது.
- 1972 ஆம் ஆண்டில் ஐநா பொதுச் சபை இந்த நாளை உலகச் சுற்றுச்சூழல் தினமாக அறிவித்தது.
- இந்த ஆண்டு, இது நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததைக் குறிக்கிறது.
- 1973 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அன்று முதல் உலகச் சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப் பட்டது.
- இந்த ஆண்டின் கருப்பொருள் "நெகிழி மாசுபாட்டை முறியடித்தல்" என்பதாகும்.
Post Views:
282