இத்தினமானது 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது.
சுற்றுலா வளர்ச்சியினை, திடீர் சீர்குலைவுகள் மற்றும் அவசரநிலைகளை எதிர் கொள்ளும் வகையில் நெகிழ்திறன் கொண்டதாக மாற்றுவதன் அவசியத்தை முன்னிலைப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பல்வேறு சவால்களுக்கு எதிராக சுற்றுலாத் துறையை வலுப்படுத்துதல், நிலையான மேம்பாட்டினை ஆதரித்தல் மற்றும் பொருளாதார உறுதித் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த முன்னெடுப்பு கவனம் செலுத்துகிறது.