நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் உலக நாடுகளின் மூலதனத்திற்கான ஒரு ஆதாரமாக விளங்கும் இறையாண்மை மிக்கச் செல்வ வள நிதி நிறுவனத்தின் (SWFI) உலகச் செல்வ வள மாநாடு (GWC) ஆனது இலண்டனில் நடைபெற உள்ளது.
உலகச் செல்வ வள மாநாடு என்ற ஒரு தளமானது இந்தியாவினைச் சேர்ந்த சில நிறுவனங்களை உள்ளடக்கிய வகையில் உலகின் மிகப்பெரிய மூலதன ஆதாரங்களில் சிலவற்றை ஈர்த்துள்ளது.
உலகளவில் இறையாண்மைச் செல்வ நிதிகளில் நேரடி முதலீடுகளுக்குத் தகுந்த ஒரு இடமாக இந்திய நாடு கருதப் படுகின்றது.
2021 ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட வெறும் 4.3 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில் 6.714 பில்லியன் டாலர்கள் இந்தியாவில் இறையாண்மை செல்வ நிதிகளில் நேரடியாக முதலீடு செய்யப் பட்டுள்ளன.