TNPSC Thervupettagam

உலகத்தின் உயரமான எரிமலையில் ஏறிய இரண்டாவது இந்தியர்

July 11 , 2018 2331 days 738 0
  • அர்ஜென்டினா - சிலி எல்லையில் உள்ள உலகின் உயர்ந்த (6893 மீ) எரிமலை ஓஜோஸ் டெல் சலாடோவின் மேல் மல்லி மஸ்தான் பாபுவிற்கு பிறகு ஏறிய இரண்டாவது இந்திய மலையேறும் நபர் சத்யர்ப் சித்தாந்தா ஆவார்.
  • இவர் தென் துருவத்தின் கடைசிப் பாகை (தூரம்) வரை 111 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய தூரத்தில் பறந்திருக்கிறார்.
  • டிசம்பர் 2017-ல் வின்சன் மாசிப்பில் ஏறி, ஏழு உச்சிகளை ஏறி முடித்த ஐந்தாவது ஒரே இந்தியராகி இருக்கிறார். (மெஸ்னரின் பட்டியல்)

ஓஜோஸ் டெல் சலாடோ சிகரம்

  • ஓஜோஸ் டெல் சாலாடோ சிகரம் அர்ஜென்டினா-சிலி எல்லையில் உள்ள ஆன்டிஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள அடுக்கு எரிமலை (எரிமலைக் குழம்பு மற்றும் சாம்பல் ஆகியவற்றால் மாறிமாறியமைந்த அடுக்குகளால் உருவாக்கப்பட்ட எரிமலை) ஆகும்.
  • 6893 மீ உயரத்தில் அமைந்துள்ள உலகின் உயர்ந்த இயங்கும் எரிமலை இதுவாகும்.
  • மேற்கு மற்றும் தென் துருவத்திலேயே இரண்டாவது உயர்ந்த சிகரம் மற்றும் சிலியிலேயே உயர்ந்த சிகரம் இதுவாகும்.
  • இதன் அர்த்தம் ஸ்பானிய மொழியில் “உப்பாலான ஒரு பொருளின் கண்கள்“ ஆகும். பனிப்பாறைகளில் காணப்படும் கண்கள் அல்லது காயல்கள் வடிவில் உள்ள மிகுதியான உப்புப் படிமங்களிலிருந்து இவை உருவாகின்றன.
  • வறண்ட நிலை பொதுவாகக் காணப்பட்டாலும், சிகரத்தின் கிழக்குப் பகுதியில் 6390 மீட்டர் உயரத்தில் அமைந்த 100 மீ விட்டம் கொண்ட நிரந்தரமான எரிமலைவாய் ஏரி இதில் உள்ளது.
  • எந்த வகையிலும் உலகில் இது உயரமான ஏரியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்