TNPSC Thervupettagam

உலகத் தமிழ் மாநாடு

January 13 , 2019 2014 days 6595 0
  • 10வது உலகத் தமிழ் மாநாடு 2019-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சிகாகோவில் நடைபெறும்.
  • இம்மாநாடு
    • தமிழ் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு,
    • வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு,
    • சிகாகோ தமிழ்ச் சங்கம்
ஆகியவற்றால் நடத்தப்பட இருக்கின்றது.
  • அமெரிக்க மண்ணில் ஒரு உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
  • சிகாகோ சர்வதேசக் கருத்தரங்கானது “கீழடி நம் தாய் மடி” (நமது தமிழ்த் தாயின் மடி – கீழடி அகழாய்வு) என்ற மையக் கருத்துருவுடன் தமிழ் ஆய்வுகளுக்கான கருத்தரங்கின் மீது முக்கிய கவனத்தைச் செலுத்துகிறது.
  • மேலும் இம்மாநாடு தமிழ் அறிஞர் போதகர் ஜி.யு. போப் என்பவரது 200வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்காக அர்ப்பணிக்கப்படுகின்றது.
பின்னணி
  • தனி நாயகம் அடிகளின் முயற்சியில் 1966-ம் ஆண்டில் மலேசியாவில் முதல் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.
  • இவற்றில் மூன்று மாநாடுகளானது 1968, 1988, 1995 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டன.
  • 9வது உலகத் தமிழ் மாநாடு 2015-ம் ஆண்டில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது.
Official title Host city Host country Year Arranged by
1st World Tamil Conference Kuala Lumpur  Malaysia 1966 Thani Nayagam Adigalar
2nd World Tamil Conference Chennai  India 1968 M. Bhaktavatsalam and C. N. Annadurai
3rd World Tamil Conference Paris  France 1970
4th World Tamil Conference Jaffna  Sri Lanka 1974
5th World Tamil Conference Madurai  India 1981 M. G. Ramachandran
6th World Tamil Conference Kuala Lumpur  Malaysia 1987
7th World Tamil Conference Port Louis  Mauritius 1989
8th World Tamil Conference Thanjavur  India 1995 J. Jayalalithaa
9th World Tamil Conference Kuala Lumpur  Malaysia 2015
10th World Tamil Conference Chicago  USA 2019 International Association for Tamil Research, FeTNA & Chicago Tamil Sangam
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்