உலகத் திறமைகள் தரவரிசை 2023
October 3 , 2023
418 days
339
- சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) ஆனது 2023 ஆம் ஆண்டு உலகத் திறமை தரவரிசையினை வெளியிட்டுள்ளது.
- இந்தத் தரவரிசையில் சுவிட்சர்லாந்து நாடு முதலிடத்திலும், லக்ஸம்பர்க் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
- அதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
- இந்தத் தரவரிசையில் உள்ள 64 நாடுகளில், இந்தியா நான்கு இடங்கள் சரிந்து 56வது இடத்தினைப் பெற்றுள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் இந்தியா 52வது இடத்தில் இருந்தது.
- அமெரிக்கா 15வது இடத்திலும், சீனா 41வது இடத்திலும், ஐக்கியப் பேரரசு 35வது இடத்திலும் உள்ளன.
- பிரேசில் (63வது) மற்றும் மங்கோலியா (64வது) கடைசி இரண்டு இடங்களைப் பெற்று உள்ளன.
Post Views:
339