மக்களையும் கிரகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தேனீக்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கை உயிரினங்கள் வகிக்கும் இன்றியமையாதப் பங்கு மற்றும் இன்று அவை எதிர்கொள்ளும் பல சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக தேனீ தினமானது முதன் முதலில் 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் அனுசரிக்கப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தேனீ மகரந்தச் சேர்க்கை இனங்களுக்கு உகந்த வேளாண் உற்பத்தியில் ஈடுபடுதல்” என்பதாகும்.