உலக நாடுகளின் அரசாங்க உச்சி மாநாட்டின் போது வொயிட் சீல்டு (White Shield) என்ற அமைப்பானது உலகளாவியத் தொழிலாளர் வள நெகிழ்திறன் குறியீட்டினை வெளியிட்டது.
வேலைவாய்ப்பு சார்ந்த ஏற்ற இறக்கங்களைத் தாங்கும் நாடுகளின் திறனையும், அவற்றை எதிர்த்துப் போராடும் திறனையும் இந்தக் குறியீடு அளவிடுகிறது.
முதல் வகையான இந்த அறிக்கையானது, தொழில்நுட்பச் சீர்குலைவுகள், பெருந் தொற்றுகள், பசுமைப் பொருளாதாரம் மாற்றம் போன்ற பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் 136 நாடுகளைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, சிங்கப்பூர், சுவீடன் ஆகிய இந்த நாடுகள் குறியீட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த அறிக்கையில் இந்தியா 65வது இடத்தில் உள்ளது.
தெற்காசியாவில் உள்ள மற்ற அனைத்து நாடுகளும் 80 என்ற தரவரிசைக்குக் கீழான இடங்களில் உள்ளன.
இந்த அறிக்கையில் பாகிஸ்தான் 97வது இடத்தைப் பிடித்தது.
இந்தத் தரவரிசையில் இடம் பெற்ற மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நாடுகள் (136 நாடுகளில் 49 நாடுகள்) தொழிலாளர் வளச் சந்தை நெகிழ்திறனில் 100க்கு 50க்கும் குறைவான மதிப்பெண்களையேப் பெற்றுள்ளன.