TNPSC Thervupettagam

உலகத் தொழுநோய் தினம் - ஜனவரி 29

January 31 , 2023 571 days 294 0
  • தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • தொழுநோய் தொடர்பான தவறானத் தகவல்கள் மற்றும் பாகுபாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கான அழைப்பினை இந்த நாள் விடுக்கிறது.
  • தொழுநோய் ஹேன்சன் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஜெர்ஹார்டு ஹென்ரிக் ஆர்மயர் ஹேன்சன் 1873 ஆம் ஆண்டில் மெதுவாக வளர்கின்ற மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியம் தான் இந்த நோய்க்கான முக்கியக் காரணம் என்பதனைக் கண்டறிந்தார்.
  • 2023 ஆம் ஆண்டு உலகத் தொழுநோய் தினத்தின் கருத்துரு, "தற்போது செயலாற்றித் தொழுநோயை முடிவுக்குக் கொண்டு வருதல்" என்பதாகும்.
  • இது 1954 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டினைச் சேர்ந்த புரவலரான ரவுல் ஃபோல்லேரோ என்பவரால் நிறுவப்பட்டது.
  • தொழுநோய் என்பது ஒரு நாள்பட்ட தொற்று நோயாகும் என்பதோடு, இது மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
  • இது மெதுவாக அதிகரிக்கிற நிலையில், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி சராசரியாக 5 ஆண்டுகள் ஆகும்.
  • இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதியன்று காந்தி அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • உலகளவில் பதிவான தொழுநோய்ப் பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் கண்டறியப் பட்டுள்ளன.
  • 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் 1,33,781 தொழுநோய்ப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் உலகளவில் 1,40,546 தொழுநோய்ப் பாதிப்புகள் (புதிய பாதிப்புகள்) பதிவாகி உள்ளன.
  • இந்தியாவில், தொழுநோயின் பாதிப்பு வீதம் 10,000 மக்கள்தொகைக்கு 0.4 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்