2021 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் உலகப் பங்குச் சந்தை மூலதனத்தில் இந்தியாவின் பங்கு 2.60% என ப்ளூம்பெர்க் தரவுகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நீண்ட காலச் சராசரியான 2.45% என்ற ஒரு அளவுடன் ஒப்பிடுகையில் உலகப் பங்குச் சந்தை மூலதனத்தில் இந்தியாவின் பங்கு உயர்ந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பங்குச் சந்தை மூலதனமானது ஒரு வருடத்தில் 66% உயர்ந்து 3.02 டிரில்லியன் டாலராக உள்ளது.
இது உலகளாவிய அளவிலான பங்குச் சந்தை மூலதனத்தின் 44% வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது.
இந்தியா கடந்த ஐந்தாண்டுகளாக பங்குச் சந்தை மூலனத்தின் உலகளாவிய வளர்ச்சியை விட ஆண்டுக்கு 14.7% என்ற வீதத்தில் 13.25 சதவீதத்திற்கும் மேலான விகிதத்தில் வளர்ந்து வருகிறது.
கடந்த ஓர் ஆண்டில் இந்தியாவின் பங்குகளானது 49% வருமானத்தை அளித்துள்ளது.