TNPSC Thervupettagam

உலகப் பசுமை இல்ல வாயுக் கண்காணிப்பு (G3W)

May 29 , 2023 418 days 303 0
  • உலக வானிலையியல் மாநாட்டு அமைப்பானது, ஒரு புதியப் பசுமை இல்ல வாயு (GHG) கண்காணிப்பு முன்னெடுப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • உலகப் பசுமை இல்ல வாயுக் கண்காணிப்பு (G3W) என்பது உலக வானிலையியல் அமைப்பு (WMO) மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • UNFCCC அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பிறப் பங்குதாரர் நாடுகளுக்கான விதி முறைகளை ஆதரிப்பதற்காக பசுமை இல்ல  வாயு உமிழ்வுகளின் (உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை) சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த கண்காணிப்பை நிறுவுவதை G3W நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதிய உலகளாவிய GHG கண்காணிப்பு அமைப்பானது, முக்கியமான தகவல் பரவலில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதோடு ஒரு ஒருங்கிணைந்த மற்றும் செயல்பாட்டுக் கட்டமைப்பை வழங்கும்.
  • இந்த அமைப்பானது, 100க்கு 100 கிமீ என்ற ஒரு தெளிவுத் திறனில், வளிமண்டலத்தில் மற்றும் அதற்கு வெளியே உள்ள சில நிகர GHG உமிழ்வுகளின் மாதாந்திர உலகளாவிய மதிப்பீடுகளை நிலையான முறையில் வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்