TNPSC Thervupettagam

உலகப் பட்டினிக் குறியீடு 2020

October 21 , 2020 1496 days 756 0
  • உலகப் பட்டினிக் குறியீடானது வெல்ஹங்கர் லைப்  மற்றும் கன்சர்ன் வேர்ல்டுவைடு (Welhunger life and Concern Worldwide) ஆகியவற்றினால் கூட்டாகத் தயாரிக்கப் பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது உலக நாடுகளை ஊட்டச்சத்துக் குறைபாடு, உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதது, எடைக்கேற்ற உயரம் இல்லாதது மற்றும் குழந்தை இறப்பு ஆகிய 4 குறிகாட்டிகளின் அடிப்படையில் அந்த நாடுகளைத் தரவரிசைப் படுத்துகின்றது.

சிறப்பம்சங்கள்

  • இந்த அறிக்கையானது இந்தியாவைகடுமையான பிரிவின்கீழ் வைத்துள்ளது. மேலும் அது இந்தியாவிற்கு 27.2 மதிப்பெண்களைத் தந்து இருக்கின்றது.
  • இந்த ஆண்டில் மொத்தமுள்ள 107 நாடுகளிடையே இந்தியாவானது 94வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டில் நேபாளம் 73வது இடத்திலும் வங்கதேசம் 75வது இடத்திலும் பாகிஸ்தான் 88வது இடத்திலும் இதில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் இந்தியா 103வது இடத்திலும் 2019 ஆம் ஆண்டில் 102வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டு இருந்தது.
  • இந்தியாவில் 0–5 வயதுக் குழுவினரிடையே எடைக்கேற்ற உயரம் இல்லாத விகிதமானது 37.4% ஆகப் பதிவாகியுள்ளது.
  • உயரத்திற்கேற்ற எடை இல்லாத விகிதமானது 17.3% ஆகப் பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டு விகிதமானது 14% ஆகப் பதிவாகியுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, குழந்தை இறப்பு விகிதமானது 3.7% ஆக உள்ளது.

குறிப்பு

  • உயரத்திற்கு ஏற்ற எடைஎன்பதுஉயரத்திற்கேற்ற அளவில் இல்லாது குறைந்த அளவில் எடையைகொண்டிருப்பதைக் குறிக்கின்றது.
  • ஊட்டச்சத்துக் குறைபாடுஎன்பது தேவைக்குக் குறைவான கலோரியை எடுத்துக் கொள்ளும் மக்கள் தொகையின் பங்காகும்.
  • எடைக்கேற்ற உயரம்என்பது குழந்தையானது அதன் எடைக்கேற்ற உயரத்தைக் கொண்டு இருக்கவில்லை என்பதைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்