TNPSC Thervupettagam

உலகப் பட்டினிக் குறியீடு 2024

October 17 , 2024 37 days 197 0
  • இது 'கன்சர்ன் வேர்ல்டுவைட்' மற்றும் 'வெல்த்ஹங்கர்ஹைல்ஃப்' ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான 19வது உலகப் பட்டினிக் குறியீடு (GHI) அறிக்கையில் மதிப்பிடப் பட்ட 127 நாடுகளில் இந்தியா 105வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இது இந்தியாவை 'தீவிர' பட்டினி நிலைப் பிரச்சனைகள் உள்ள நாடுகளுள் ஒன்றாக வகைப்படுத்துகிறது.
  • இந்தியா அதன் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், மியான்மர் மற்றும் வங்காள தேசத்தை விட பின்தங்கியுள்ளது, அதே நேரத்தில் இது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை விட சற்று மேல் நிலையில் உள்ளது.
  • முறைமை மற்றும் திருத்தப்பட்ட தரவுகளின் மாற்றம் காரணமாக 2024 ஆம் ஆண்டு அறிக்கையை 2023 ஆம் ஆண்டு அறிக்கையுடன் நேரடியாக ஒப்பிட முடியாது.
  • இருப்பினும், இது 2000, 2008, 2016 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான ஒப்பீட்டுத் தரவை வழங்குகிறது.
  • உலக அளவில் அதிக குழந்தை வளர்ச்சி குறைபாடு விகிதத்துடன் (18.7%) குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இந்தியா தொடர்ந்து கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.
  • இந்தியாவில் குழந்தை வளர்ச்சியின்மை விகிதம் 35.5% ஆகவும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயரிழப்பு விகிதம் 2.9% ஆகவும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு 13.7% ஆகவும் உள்ளது.
  • உலகளவில், போதிய அளவு உணவு கிடைக்காததால் ஒவ்வொரு நாளும் சுமார் 733 மில்லியன் மக்கள் பட்டினி நிலையை எதிர்கொள்கின்றனர்.
  • மேலும், சுமார் 2.8 பில்லியன் மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலை உள்ளது.
  • தெற்கு சூடான், புருண்டி, சோமாலியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலின் கடைசி இடங்களில் இடம் பெற்றுள்ள மூன்று நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்