இந்தத் தினமானது, பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் சமூகத்தின் சீரான மற்றும் பயன்மிகுச் செயல்பாட்டில் அதன் பங்கையும் குறிக்கிறது.
2023 ஆம் ஆண்டு உலகப் பத்திரிகைச் சுதந்திரத் தினமானது, இந்த தினத்தின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இது 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப் பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உரிமைகளின் எதிர்காலத்தை மாற்றி அமைத்தல்: மற்ற அனைத்து மனித உரிமைகளுக்குமான ஓர் இயக்கியாக விளங்கும் கருத்துச் சுதந்திரம்" என்பதாகும்.