இது 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் பறை சாட்டப்பட்டது.
மே 3 என்ற தினமானது விண்ட்ஹூக் பிரகடனத்தின் (Windhoek Declaration) நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
இது 1991 ஆம் ஆண்டில் நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹூக்கில் ஆப்பிரிக்க செய்தித்தாள் பத்திரிக்கையாளர்களால் கொண்டு வரப்பட்ட சுதந்திரமான பத்திரிக்கைக்கான கொள்கைகளின் கூற்றாகும்.
யுனெஸ்கோ ஆனது யுனெஸ்கோ/கில்லிரிமோ கேனோ உலகப் பத்திரிக்கைச் சுதந்திரப் பரிசை வழங்குவதன் மூலம் இத்தினத்தை அனுசரிக்கின்றது.
இது உலகம் முழுவதும் பத்திரிக்கைச் சுதந்திரத்தின் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பிற்காக தலைசிறந்த பங்களிப்புகளை ஆற்றிய தனிநபர்கள், அமைப்பு மற்றும்/அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “சாதகமும் பயமும் அற்ற பத்திரிக்கைத் துறை” என்பதாகும்.
1993 ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் உலகளாவியக் கருத்தரங்கானது நடத்தப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டின் உலகப் பத்திரிக்கைச் சுதந்திரக் கருத்தரங்கை நடத்தும் நாடு நெதர்லாந்து ஆகும்.