பருத்தியின் மிகவும் மகத்தான பல்துறைத் திறனை வெளிப்படுத்துவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
ஜவுளித் தொழில் துறையில் பருத்தி பிரதானமாக உள்ளது.
கால்நடைத் தீவனம், மருத்துவப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி ஆகியவற்றிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த நாள் ஆனது நான்கு பருத்தி நாடுகளான புர்கினா பாசோ, பெனின், சாட் மற்றும் மாலி மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் உருவானது.
முதல் உலகப் பருத்தி தினமானது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 07 ஆம் தேதியன்று ஜெனீவாவில் தொடங்கப்பட்டு அனுசரிக்கப் பட்டது.
இந்த ஆண்டின் கருத்துரு "Megatrends Shaping Cotton Textile Value Chain” என்பதாகும்.