2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கான பருவநிலை தொழில் நுட்ப முதலீட்டின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட 10 முன்னணி நாடுகளில் இந்தியா 9வது இடத்தைப் பெற்றுள்ளது.
லண்டன் & பார்ட்னர்ஸ் மற்றும் அதன் இணை அமைப்புகளால் வெளியிடப்பட்ட “பாரீஸ் உடன்படிக்கையின் முதல் 5 ஆண்டுகளில்: உலகப் பருவநிலைத் தொழில் நுட்ப முதலீட்டின் போக்கு” என்ற அறிக்கையின் படி இது கூறப்பட்டுள்ளது.
இந்தியப் பருவநிலைத் தொழில்நுட்ப நிறுவனங்களானது இந்தக் காலகட்டத்தில் துணிகர முதலீட்டு நிதியில் 1 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா 2வது இடத்திலும் உள்ளன.