TNPSC Thervupettagam

உலகப் பருவநிலை அறிக்கை 2023

March 23 , 2024 118 days 237 0
  • பசுமை இல்ல வாயு அளவுகள், மேற்பரப்பு வெப்பநிலை, கடல் வெப்பம் மற்றும் அமில மயமாக்கல் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை 2023 ஆம் ஆண்டில் ஒரு அதிகபட்ச அளவை எட்டியுள்ளன.
  • உலக வானிலை அமைப்பின் (WMO) “உலகப் பருவநிலை 2023” என்ற தலைப்பிலான புதிய அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • 174 ஆண்டு காலக் கண்காணிப்புப் பதிவில் 2023 ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
  • உலக நாடுகளில் பதிவான சராசரி மேற்பரப்பு அருகுநிலை வெப்பநிலையானது தொழில் துறைக்கு முந்தைய அடிப்படை வெப்பநிலை மதிப்பினை விட (1850-1900) 1.45 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில் CO2 செறிவு தொடர்ந்து உயர்ந்தது, அதே சமயம் உலகளாவியச் சராசரி கடல் மட்டம் அதிகபட்ச அளவை எட்டியது.
  • கடந்த 10 ஆண்டுகளில் (2014-2023) பதிவான கடல் மட்ட உயர்வு விகிதம் ஆனது, முதல் பத்தாண்டு காலச் செயற்கைக்கோள் தரவுப் பதிவை (1993 - 2002) விட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  • 2022-2023 என்ற நீரியல் ஆண்டிற்கான (1950-2023) மதிப்பீட்டுக் குறிப்பிற்கான உலகளாவியப் பனிப்பாறைகளில் மிகப்பெரிய பனி இழப்புகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்