TNPSC Thervupettagam

உலகப் பருவநிலை 2022 அறிக்கை

April 27 , 2023 578 days 289 0
  • உலக வானிலை அமைப்பு (WMO) ஆனது, 2022 ஆம் ஆண்டு உலகப் பருவநிலை குறித்த  அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 173 வருடங்களாக வெளியிடப் பட்டு வரும் இந்த முக்கியப் பதிவில், 2015 முதல் 2022 வரையிலான ஆண்டுகள் மிகவும் வெப்பமான எட்டு ஆண்டுகளாகும்.
  • தெற்காசியா மற்றும் இந்தியத் துணைக் கண்டப் பகுதிகள் பருவநிலை மாற்றங்களால் அதிகமாகப் பாதிக்கப் படக் கூடியப் பகுதிகளாக அறியப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவியச் சராசரி வெப்பநிலையானது, 1850-1900 ஆண்டு காலச் சராசரியை விட 1.15 ° C [1.02–1.28] அதிகமாக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியப் பருவமழையானது இயல்பை விட முன்னதாகத் தொடங்கி தாமதமாக முடிவடைந்தது.
  • கோடைப் பருவ மழையினைப் பெறும் மேற்கு இந்தியப் பகுதிகளில் பதிவான மொத்த மழைப் பொழிவானது, நீண்ட கால (1951–2000) சராசரியை விட அதிகமாக இருந்தது.
  • முதலாவது பத்தாண்டுகளில் பதிவான செயற்கைக் கோள் பதிவின் (1993-2002) படி, உலகச் சராசரி கடல் மட்ட உயர்வு விகிதம் ஆனது ஆண்டிற்கு 2.27 மி.மீ. ஆக உள்ளது.
  • இது 2013-2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டிற்கு 4.62 மி.மீ. என இரட்டிப்பாகியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதியன்று, அண்டார்டிக் கடலின் பனிப்பரவலானது, 1.92 மில்லியன் சதுர கிலோமீட்டர் என்று இது வரை இருந்த அளவை விட குறைவான அளவினை எட்டியது.
  • இது நீண்ட கால (1991-2020) சராசரியை விட கிட்டத்தட்ட 1 மில்லியன் சதுர கி.மீ. குறைவாக உள்ளது.
  • வறட்சி காரணமாக சோமாலியாவில் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்கள் உள் நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ள நிலையில், அதே காலகட்டத்தில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் எத்தியோப்பியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்