இந்தத் தரவரிசையில் ஹார்வர்டு பல்கலைக்கழகமானது முதலிடத்தையும் அதனைத் தொடர்ந்து மாசாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
உலகம் முழுவதுமான 2000 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 68 இந்தியக் கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
அலகாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமானது (IIM-Ahmedabad) 415வது இடத்தையும் அதனையடுத்து இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது (IISc) 459வது இடத்தையும் பெற்றுள்ளன.