- குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நடைபெற்ற உலகப் பள்ளிகளின் விவாதத்திற்கான சாம்பியன்ஷிப் போட்டிகளில் (WSDC-World School Debating Championship) 2018-ல் இந்தியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
- சீனா இந்தியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
- இப்போட்டிகளில்
- சரண்யா இரவீந்தரன், தேஜாஸ் சுப்பிரமணியம் மற்றும் ஹேமந்த் சக்கரவர்த்தி - PSBB பள்ளி, சென்னை.
- மணியா குப்தா - நீரஜா மோடிப் பள்ளி, ஜெய்ப்பூர்
- தனன்ஜய், அசோக் - தி இண்டர்நேஷனல் பள்ளி, பெங்களூரு
ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர்.
- WSDC என்பது ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த உயர் பள்ளி நிலையிலான அணிகள் பங்குபெறும் ஆங்கில மொழியில் விவாதிக்கும் போட்டியாகும்.
- முதன்முறையாக இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் 1988-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. 2017ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூர் வெற்றி பெற்றது.
- 2019ஆம் ஆண்டிற்கான உலக பள்ளிகளின் விவாதிக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் இலங்கையின் கொழும்புவில் நடைபெறவிருக்கிறது.