உலகப் பழங்குடி மக்களின் சர்வதேசத் தினம் அல்லது உலகப் பழங்குடியினர் தினம் 2023 – ஆகஸ்ட் 09
August 11 , 2023 474 days 203 0
இது உலகப் பழங்குடியினர் தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
1982 ஆம் ஆண்டு ஜெனீவா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவின் முதல் கூட்டத்தினை அங்கீகரிக்கும் விதமாக இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது உலகப் பழங்குடியின மக்களின் சர்வதேசத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தது.
ஐக்கிய நாடுகள் சபையானது 2019 ஆம் ஆண்டினை பழங்குடியின மொழிகளின் சர்வதேச ஆண்டாக நியமித்தது.
இந்த ஆண்டின் உலகப் பழங்குடியினர் தினத்திற்கான கருத்துரு “தற்சார்பு உரிமைக்கான மாற்றத்தின் முகவர்களாக விளங்கும் பழங்குடியின இளையோர்கள்” என்பதாகும்.
பழங்குடியினர், உலக மக்கள்தொகையில் சுமார் 5% உள்ளனர், ஆனால் உலகில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களில் 15%க்கும் அதிகமானவர்கள் பழங்குடியினர் ஆவர்.