உலகப் பவளப்பாறை வெளிர்தல் நெருக்கடி 2025
April 28 , 2025
18 hrs 0 min
43
- உலகின் மிகவும் மோசமான உலகளாவியப் பவளப்பாறை வெளிர்தல் நிகழ்வு ஆனது தற்போது உலகின் பவளப் பாறைகளில் சுமார் 84 சதவீதத்தினைப் பாதித்துள்ளது.
- குறைந்தது சுமார் 83 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பெருமளவிலான பவளப்பாறை வெளிர்தல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தற்போது ஏற்பட்டு வரும் உலகளாவியப் பவளப்பாறை வெளிர்தல் நிகழ்வு ஆனது இன்று வரை பதிவானதில் மிகப்பெரியதாகும்.
- முந்தைய ஒரு மாபெரும் வெளிர்தல் நிகழ்வானது 2014-2017 ஆம் ஆண்டு வரையில் பதிவான 3வது உலகளாவியப் பவளப்பாறை வெளிர்தல் நிகழ்வாகும்.
- இந்த நிகழ்வின் போது, உலகின் பவளப்பாறை பகுதியில் சுமார் 68.2 சதவீதம் ஆனது வெளிர்தல் நிலை எட்டும் வகையிலான வெப்பத் தாக்கத்தினை எதிர்கொண்டன.
- முதலாவது மற்றும் இரண்டாவது உலகளாவியப் பவளப்பாறை வெளிர்தல் நிகழ்வுகள் முறையே 1998 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தன.
- ஆஸ்திரேலியாவின் பவளப் பாறைகள் 1998, 2002, 2016, 2017, 2020, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பெருமளவிலான பவளப் பாறை வெளிர்தலால் பாதிக்கப் பட்டன.

Post Views:
43