சமீபத்தில் சீனாவின் அதிபர் ஒரு புதிய உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பினை (GSI) முன்மொழிந்துள்ளார்.
உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பானது, "பொதுவான, விரிவான, கூட்டுறவு மற்றும் ஒரு நிலையான" பாதுகாப்பிற்கான அழைப்பினை விடுப்பதோடு, பரஸ்பர மதிப்பு, தடை அற்ற நிலை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கான ஆசியப் பாதுகாப்பு மாதிரியை உருவாக்குகிறது.
இது அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்தி சார் கூட்டமைப்பு மற்றும் குவாட் அமைப்பு (இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் குழுமம்) ஆகியவற்றிற்கு நேர்மாறாகச் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவியப் பாதுகாப்பு முன்னெடுப்பானது "பகுக்க முடியாதப் பாதுகாப்பு" என்ற கொள்கையை நிலை நிறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சீனா கூறியது.
"பகுக்க முடியாத பாதுகாப்பு" என்ற கொள்கையின் பொருள், எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் இழப்பின் மூலம் தனது சொந்தப் பாதுகாப்பைப் பலப்படுத்த முடியாது என்பதாகும்.