46வது உலகப் பாரம்பரியக் குழுவின் அமர்வு ஆனது, புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டு நிகழ்வின் போது யுனெஸ்கோ அமைப்பானது உலகப் பாரம்பரியப் பட்டியலில் 25 புதிய முக்கிய தளங்களைச் சேர்த்துள்ளது.
இரண்டு முக்கிய எல்லை மாற்றங்களும் இக்குழுவால் முறைப்படுத்தப் பட்டுள்ளன.
இவற்றில், ஜப்பானின் சாடோ தீவு தங்கச் சுரங்கங்கள், தாய்லாந்தின் ஃபு பிரபாத் வரலாற்றுப் பூங்கா, மனித உரிமைகள், விடுதலை மற்றும் நல்லிணக்கத்திற்கான தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா மரபுசார் தளங்கள், இத்தாலியின் வயா அப்பியா மற்றும் சீனாவின் பெய்ஜிங் சென்ட்ரல் ஆக்சிஸ் எனப்படும் சாலை உள்ளிட்ட 13 புதிய தளங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவற்றில் 19 இடங்கள் கலாச்சாரப் பாரம்பரியத் தளங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
4 இடங்கள் இயற்கைப் பிரிவின் கீழும், மேலும் இரண்டு இடங்கள் "கலப்பு" பிரிவின் கீழும் சேர்க்கப் பட்டுள்ளன.