TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரிய தினம் - ஏப்ரல் 18

April 20 , 2021 1228 days 521 0
  • இது நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது 1982  ஆம் ஆண்டு ஏப்ரல் 18, அன்று சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான மன்றத்தால் (ICOMOS-International Council on Monuments and Sites) முன்மொழியப் பட்டு, 1983 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ பொதுச் சபையால் அது அங்கீகரிக்கப் பட்டது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Complex Pasts: Diverse Futures” (சிக்கலான கடந்த காலங்கள்: பன்முகத் தன்மை கொண்ட எதிர்காலங்கள்) என்பதாகும்.
  • தற்போது, இந்தியாவில் 38 உலகப் பாரம்பரிய தளங்கள் உள்ளன, அவற்றில் 30 பண்பாட்டு ரீதியிலான பாரம்பரியத் தளங்களும், 7 இயற்கை ரீதியிலான பாரம்பரியத் தளங்களும் மற்றும் 1 கலப்புத் தளமும் உள்ளது.
  • கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்கா  என்பது கலப்புத் தளம் ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் நகரமானது கலாச்சாரப் பட்டியலின் கீழ் இந்தியாவின் 38வது தளமாக தேர்ந்தெடுக்கப் பட்டது
  • இந்திய நாடானது, தளங்களின் எண்ணிக்கையில் உலகளவில் ஆறாவது இடத்தில உள்ளது.
  • இது வரையில் சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை மட்டுமே இந்தியாவை விட இந்தப் பட்டியலில் அதிக தளங்களைக் கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்