இது நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
இத்தினத்தை அனுசரிப்பதன் நோக்கம் சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் ஆணையத்தினால் (ICOMOS - International Council on Monuments and Sites) மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம் கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதாகும்.
ஏப்ரல் 18 ஆம் தேதியானது நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேசத் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்று ICOMOS பரிந்துரைத்தது.
இதற்கு 1983 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பொதுச் சபையினால் ஒப்புதல் அளிக்கப் பட்டது.
2020 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “பகிரப்பட்ட கலாச்சாரம்; பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் பகிரப்பட்டப் பொறுப்புடைமை” என்பதாகும்.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் 2020 ஆண்டின் உலகக் கலாச்சாரத் தினத்தை மாமல்லபுரம் மற்றும் டெல்லி ஹுமாயுன் கல்லறை ஆகியவற்றின் மீதான ஒரு இணைய தளக் கருத்தரங்குடன் அனுசரித்தது
யுனெஸ்கோ அமைப்பானது உலகப் பாரம்பரியத் தளத்தை சிறப்புப் பாதுகாப்பு தேவைப்படுகின்ற இடம் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு அல்லது இயற்கையாக (அ) மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி என்று வரையறுக்கப் படுகின்றது.
இந்தியாவில் மொத்தம் 38 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
இதில் 30 கலாச்சாரத் தளங்கள், 7 இயற்கைத் தளங்கள் மற்றும் 1 கலப்புத் தளம் ஆகியவை உள்ளடங்கும்.
உலகில் அதிக எண்ணிக்கையிலான பாரம்பரியத் தளங்களைக் கொண்ட 6வது நாடு இந்தியா ஆகும்.