TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரிய வாரம் - நவம்பர் 19 முதல் 25 வரை

November 27 , 2022 636 days 240 0
  • உலகப் பாரம்பரிய வாரமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19 முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
  • இது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பாதுகாப்பை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகப் பாரம்பரிய வாரமானது இந்தியத் தொல்லியல் துறையினால் கொண்டாடப் படுகிறது.
  • இந்தியத் தொல்லியல் துறையால் 3,691 நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப் படுகின்றன.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில், அதிக எண்ணிக்கையிலான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளது.
  • இவற்றில் சுமார் 40 நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • உலகிலேயே அதிகளவில் பாரம்பரியத் தளங்களைக் கொண்ட ஆறாவது நாடு இந்தியாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்