உலகப் புத்தாக்கக் குறியீடு 2023
October 2 , 2023
419 days
603
- சமீபத்திய 2023 ஆம் ஆண்டு உலகப் புத்தாக்கக் குறியீட்டில் இந்தியா தனது 40வது இடத்தைத் தக்க வைத்துள்ளது.
- இது உலக அறிவுசார் சொத்து அமைப்பினால் (WIPO) வெளியிடப் படுகிறது.
- 132 உலக நாடுகளின் புத்தாக்கச் சூழல் அமைப்பின் செயல்திறன் மற்றும் உலக நாடுகளின் சமீபத்தியப் புத்தாக்கப் போக்குகளை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.
- 2015 ஆம் ஆண்டில், 81வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த எட்டு ஆண்டுகளாக தனது நிலையில் முன்னேறி வருகிறது.
- சுவிட்சர்லாந்து 13வது ஆண்டாக இந்தக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது.
- தற்போது சுவீடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- அதைத் தொடர்ந்து ஐக்கியப் பேரரசு (4வது) மற்றும் சிங்கப்பூர் (5வது) உள்ளன.
Post Views:
603