TNPSC Thervupettagam

உலகப் புற்றுநோய் தினம் - பிப்ரவரி 04

February 7 , 2024 164 days 154 0
  • இந்தத் தினமானது புற்றுநோய்ப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • புற்றுநோய்ச் சிகிச்சை, கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையை மேம்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இது உதவுகிறது.
  • புற்றுநோய் என்பது கட்டுப்பாடில்லாமல் பகுப்படையும் உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது.
  • புற்றுநோய் ஒரு உடல் அங்கம் / உறுப்பு / திசுக்களில் இருந்து மற்றொன்றுக்கு பரவும் திறன் கொண்டது.
  • 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 19.3 மில்லியன் புற்றுநோய்ப் பாதிப்புகள் இருந்தன.
  • நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்கள் ஆகியவை முறையே ஆண்கள் மற்றும் பெண்களில் அதிகம் காணப்படும் புற்றுநோய்ப் பாதிப்புகளாக இருந்தன.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'மருத்துவ நலச் சேவையில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்தல்: புற்றுநோய்ச் சிகிச்சைக்கான அணுகலைப் பெற அனைவருக்கும் தகுதியுண்டு' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்