TNPSC Thervupettagam

உலகப் புற்றுநோய் தினம் - பிப்ரவரி 04

February 5 , 2023 566 days 241 0
  • உலகப் புற்றுநோய் தினமானது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 04 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
  • கல்வி, விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகப் புற்றுநோய் தினத்திற்கான அதிகாரப்பூர்வ நிறங்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு ஆகும்.
  • முதலாவது புற்றுநோய் தினமானது 1933 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கொண்டாடப் பட்டது.
  • இது உலக சுகாதார நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளுக்கான இந்தத் தினத்தின் கருத்துரு - 2022, 2023 மற்றும் 2024 - "சிகிச்சை நலனில் உள்ள இடைவெளியை நிரப்புதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்