புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலகப் புற்றுநோய் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு,“I am and I will” என்பதாகும்.
இந்தக் கருத்துருவானது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
உடலின் திசு அல்லது உறுப்புகளில் உள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற, அசாதாரண வளர்ச்சியினால் புற்றுநோய் ஏற்படுகின்றது.
இது உலகளவில் நிகழும் மரணங்களுக்கு இரண்டாவது முக்கியக் காரணமாக விளங்குகின்றது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆறு நபர்களில் ஒருவர் புற்றுநோயினால் இறக்கின்றார்.
புற்றுநோயினால் ஏற்படும் ஏறக்குறைய 70% இறப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றது.
உலகப் புற்றுநோய் தினத்தைக் (பிப்ரவரி 4) குறிப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் மற்றும் புற்றுநோய் தொடர்பான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC - International Agency for Research on Cancer) ஆகியவை பின்வரும் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அவையாவன:
“புற்றுநோய் குறித்த அறிக்கை: முன்னுரிமைகளை வரிசைப்படுத்துதல், பயனுள்ள வகையில் முதலீடு செய்தல் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு அளித்தல்”.
“உலக புற்றுநோய் அறிக்கை: புற்றுநோய் தடுப்புக்கான புற்றுநோய் ஆராய்ச்சி” என்பதாகும்.