உலக நாடுகளின் வளர்ச்சியில் மேம்பட்ட, நம்பகமான மற்றும் நல்ல தரமான புள்ளி விவரங்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று இந்த தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தினமானது தேசியப் புள்ளியியல் அமைப்புகளின் மிகப்பெரிய அளவிலான மகத்தான சாதனைகளை எடுத்துரைப்பதோடு மேலும் சமூக அம்சங்களில் உள்ள பல்வேறு கோணங்களில் புள்ளி விவரங்களின் முக்கியத்துவத்தினையும் வளர்க்கிறது.
"நாம் நம்பக் கூடியத் தரவுகளுடன் உலகை இணைப்பது" என்பது 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் ஆகும்.