TNPSC Thervupettagam

உலகப் பூர்வகுடி மக்களின் சர்வதேச தினம் - ஆகஸ்ட் 09

August 11 , 2022 746 days 355 0
  • 1982 ஆம் ஆண்டில் ஜெனீவா நகரில் நடைபெற்ற பூர்வகுடி மக்கள்தொகை பற்றிய முதலாவது ஐக்கிய நாடுகளின் ஒரு செயற்குழுக் கூட்டத்தை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள 90 நாடுகளில் 476 மில்லியனுக்கும் அதிகமாகப்  பூர்வகுடி மக்கள் வாழ்வதோடு உலக மக்கள்தொகையில் பூர்வகுடி மக்கள் 6.2 சதவிகிதமாக உள்ளனர்.
  • 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதியினை உலகின் பூர்வகுடி மக்களின் சர்வதேச தசாப்தத்தின் தொடக்கமாக அறிவித்தது.
  • 1993 ஆம் ஆண்டானது உலகப் பூர்வகுடி மக்களின் சர்வதேச ஆண்டாகவும் அறிவிக்கப் பட்டது.
  • இத்தினத்தின் கருத்துரு, “பாரம்பரிய தகவல்களைப் பாதுகாத்து அதனைப் பரப்பச் செய்வதில் பூர்வகுடி பெண்களின் பங்கு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்