இது பெருங்கடலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தினமானது, 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் கனடாவின் சர்வதேசப் பெருங்கடல் மேம்பாட்டு மையம் (ICOD) மற்றும் கனடாவின் பெருங்கடல் கல்வி நிறுவனம் (OIC) ஆகியவற்றினால் முதன் முதலாக முன் மொழியப் பட்டது.
இந்த தினமானது, 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மூலம் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "“Awaken New Depth" என்பதாகும்.