உலகப் பெருங்கடல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 08 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது பெருங்கடலின் மகத்துவத்தைக் கொண்டாடுவதோடு அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றது.
இதற்கான யோசனையானது 1992 ஆம் ஆண்டில் ரியோவில் நடைபெற்ற புவி மாநாட்டில் கனடாவின் பெருங்கடல் மேம்பாட்டிற்கான சர்வதேச மையம் மற்றும் கனடாவின் பெருங்கடல் நிறுவனம் ஆகியவற்றால் முன்மொழியப்பட்டது.
சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டிற்கான பிரண்ட்லேண்ட் உலக ஆணையமானது உலகளாவியப் பெருங்கடல் தினத்திற்கு உத்வேகம் அளித்தது.
முதல் பெருங்கடல் தினமானது 1992 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
புவியின் 70 சதவீத ஆக்ஸிஜனை உலகில் உள்ள பெருங்கடல்கள் உற்பத்தி செய்கின்றன.
ஐ.நா சபையானது 2019 ஆம் ஆண்டின் கருத்துருவாக, “பாலினம் மற்றும் கடல்கள்” என்பதனைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த கருத்துருவானது, பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்வாழ் உயிரிகளைப் பாதுகாப்பத்தில் பாலினச் சமத்துவத்தின் முக்கியப் பங்கினை உரைக்கின்றது.