சர்வதேச நாணய நிதியமானது சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரியப் பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரம் ஆனது இந்த ஆண்டு 2.8 சதவிகிதம் விரிவடையும் என்று IMF கணித்துள்ளது.
இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 2.9 சதவீதத்திலிருந்து சற்று குறைந்துள்ளது ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அது கணித்த 2.6 சதவீதத்தினை விட இது அதிகம் ஆகும்.
யூரோ பண மதிப்பினைப் பகிர்ந்து கொள்ளும் 20 ஐரோப்பிய நாடுகள் கூட்டாக இந்த ஆண்டு 0.8 சதவீத வளர்ச்சியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி நாட்டின் பொருளாதாரமானது, இந்த ஆண்டு வளர்ச்சி அடையாது என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
2023 ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த உலகளாவியப் பணவீக்கம் ஆனது இந்த ஆண்டு 5.8 சதவீதமாகவும், 2025 ஆம் ஆண்டில் 4.3 சதவீதமாகவும் குறையும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் ஆனது இந்த ஆண்டு சுமார் 7 சதவீதமாகவும், 2025 ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.