சர்வதேச நாணய நிதியமானது (International Monetary Fund - IMF) தனது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் ஒரு அறிக்கையான உலகப் பொருளாதார கண்ணோட்டம் என்ற அறிக்கையை அக்டோபர் 15 அன்று வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில், உலக வளர்ச்சியானது கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
மேம்பட்ட பொருளாதாரங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சியானது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 1.7 சதவீத அளவில் சீராக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 6.1 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் வர்த்தக அளவானது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
2012 ஆம் ஆண்டு முதல் இது 1 சதவிகிதம் குறைந்துள்ளது.
இதற்குக் கூறப்பட்டுள்ள காரணங்கள்: பெரு நிறுவன & சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை, தேவைக் குறைவு, வங்கி சாரா நிதியியல் நிறுவனங்களின் ஆரோக்கியத் தன்மை.