TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள்

May 23 , 2022 918 days 427 0
  • உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் (WESP) என்ற ஒரு அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையினால் (DESA) வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • முன்னதாகக் கணிக்கப்பட்ட ஜனவரி மாத வளர்ச்சி 4.0 சதவீதமாகும்.
  • ரஷ்யா-உக்ரைன் மோதல் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதித்தாலும், இந்தியா இன்னும் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகவே உள்ளது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியா 6.4 சதவீதம் வளர்ச்சி அடையும் என இந்த அறிக்கையில் கணிக்கப் பட்டுள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்ட 8.8 சதவீதத்தை விட மிகவும் மெதுவான வளர்ச்சியாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்