உலகப் பொருளாதார மன்றத்தின் Uplink அமைப்பு ஆதரவு பெற்ற துணிகர முதலீட்டு முன்னெடுப்புகள் ஆனது கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 142,400 டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினைத் தடுத்துள்ளன.
இது சுமார் 30,000க்கும் மேற்பட்ட கார்களின்/மகிழுந்துகளின் வருடாந்திர உமிழ்விற்கு இணையான அளவாகும்.
இந்தப் புத்தொழில் நிறுவனங்கள், அமேசான் மழைக்காடுகளின் ஐந்தில் ஒரு பங்கு பரப்பளவான 140 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் பகுதிகளைப் பாதுகாத்துள்ளன.
2.5 பில்லியன் லிட்டர் அபாயகரமான கழிவுநீரைச் சுத்திகரித்தல் மற்றும் 28 மில்லியன் டன் கழிவுகளைக் கண்காணித்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவில், இந்திரா வாட்டர் நிறுவனமானது, கழிவுநீர்ச் சுத்திகரிப்புத் திறனை மிக நன்கு அதிகரித்து, 2024 ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் லிட்டர் கழிவு நீரைச் சுத்திகரித்து உள்ளது.
இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 243 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.