உலக வங்கியானது 2025 ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார வாய்ப்புகள் (GEP) அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது உலக வங்கி குழுமத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் முதன்மையான அறிக்கையாகும்.
இது உலகப் பொருளாதாரத்தின் போக்குகள் மற்றும் கணிப்புகளை ஆராய்கிறது.
உலகப் பொருளாதாரம் ஆனது, 2024 ஆம் ஆண்டில் இருந்த அதே வேகத்தில் வளர்ச்சி அடைந்தால், 2025 மற்றும் 2026 ஆகிய இரு ஆண்டுகளிலும் 2.7% விரிவடையும்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% பங்கினை வழங்கி வந்த வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் ஆனது தற்போது சுமார் 45% பங்களிக்கிறது.
இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று பெரிய வளர்ந்து வரும் நாடுகள் ஒரு கூட்டாக, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரு வருடாந்திர உலகளாவிய வளர்ச்சியில் தோராயமாக 60% பங்களித்துள்ளன.
2026 மற்றும் 2027 ஆம் நிதியாண்டுகளில் (வளர்ச்சி விகிதம் - 6.7%) இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.